• waytochurch.com logo
Quick search
Song : 15528

Pothagar Vanthuvittaar போதகர் வந்து விட்டார் - Lyrics


போதகர் வந்து விட்டார்
உன்னைத் தான் அழைக்கின்றார்

எழுந்து வா

கண்ணீர் கடலில் மூழ்கி
கலங்கி தவிக்கிறாயோ
கலங்காதே திகையாதே
கர்த்தர் உன் அடைக்கலம் மகளே

பாவச்சேற்றில் மூழ்கி
பயந்து சாகிறாயோ
தேவ மைந்தன் தேடுகிறார்
தேற்றிட அழைக்கிறார் மகளே

கல்வாரி சிலுவையைப் பார்
கதறும் இயேசுவைப் பார்
உன் பாடுகள் ஏற்றுக் கொண்டார்
உன் துக்கம் சுமந்து கொண்டார்

  • title
  • Name :
  • E-mail :
  • Type

© 2019 Waytochurch.com