• waytochurch.com logo
Song # 15718

thulluthaiyaa umm naamam solla solla துள்ளுதையா உம் நாமம் சொல்ல சொல்ல



துள்ளுதையா, உம் நாமம் சொல்ல சொல்ல
துதித்து துதித்து தினம்
மகிழ்ந்து மகிழ்ந்து
மனம் துள்ளுதையா

1. அன்பு பெருகுதையா - என்
அப்பாவின் நிழல்தனிலே
அபிஷேகம் வளருதையா
எபிநேசர் பார்வையிலே

2. உள்ளங்கள் மகிழுதையா
உம்மோடு இருக்கையிலே
பள்ளங்கள் நிரம்புதையா
பாடி துதிக்கையிலே

3. நம்பிக்கை வளருதையா
நாதா உம் பாதத்திலே
நன்மைகள் பெருகுதையா
நாள்தோறம் துதிக்கையிலே
நோய்கள் நீங்குதையா - உம்மை
நோக்கிப் பார்க்கையிலே
பேய்கள் அலறுதையா
பெரியவர் நாமத்திலே

4. கண்ணீர்கள் மறையுதையா
கர்த்தர் உம் சமூகத்திலே
காயங்கள் ஆறுதையா
கருத்தோடு துதிக்கையிலே



Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com