• waytochurch.com logo
Song : 15721

Thunbamaana Velaiyil Inbamaana Velaiyil துன்பமான வேளையில் இன்பமான வேளையில்



துன்பமான வேளையில் இன்பமான வேளையில்
கஷ்டமான பாதையில் களிப்பான நேரத்தில்
என் இயேசு என்னோடு இருக்கின்றாரே
அவரே என் கன்மலை என் கோட்டையுமானார்
எந்தன் இயேசுவே - 3

நான் நம்பும் கன்மலை என்றுமே
அவரை நான் சார்ந்திடுவேன்
அவரை நான் என்றும் சார்ந்திடுவேன் - 3
எந்தன் இயேசுவே - 3

1. கலங்கின வேளையில் கண்ணீர் மத்தியில்
வியாதியின் பாதையில் புலம்பலின் நேரத்தில்
அழாதே என் மகனே, உன்னை விடுவிப்பாரே
நீ நம்பும் தேவன் உன்னை கைவிடாரே
எந்தன் இயேசுவே - 3

2. ஊழியப் பாதையில் சோர்வான நேரத்தில்
பணக்கஷ்டம் வந்தாலும், சபை
வளராவிட்டாலும்

திடன்கொள் மனமே கலங்கிடாதே
உன்னை அழைத்தவர் உன்னை காத்திடுவார்
எந்தன் இயேசுவே - 3



  • title
  • Name :
  • E-mail :
  • Type

© 2019 Waytochurch.com