• waytochurch.com logo
Song : 15905

Vaarum Bethlagem Vaarum வாரும் பெத்லெகேம் வாரும்


வாரும் பெத்லெகேம் வாரும் - வாரும்
வரிசையுடனே வாரும்
வாரும் எல்லோரும் போய் வாழ்த்துவோம் யேசுவை
வாரும் விரைந்து வாரும்

எட்டி நடந்து வாரும் - அதோ
ஏறிட்டு நீர் பாரும்
பட்டணம்போல் சிறு பெத்லெகேம் தெரியுது
பாரும் மகிழ்ந்து பாரும்

ஆதியிலத மேவை - அந்நாள்
அருந்திய பாவவினை
ஆ திரிதத்துவ தேவன் மனிதத்துவ
மாயினர் இது புதுமை

விண்ணுலகாதிபதி - தீர்க்கார்
விளம்பின சொற்படிக்கு
மண்ணுலகில் மரிகன்னி வயிற்றினில்
மானிடனா யுதித்தார்

சொல்லுதற் கரிதாமே - ஜோதி
சுந்தர சோபனமே
புல்லணையிற் பசுமுன்னணையிற்பதி
பூபதிதான் பிறந்தார்

மந்தை மாடடையில் - மாது
மரியவள் மடியதனில்
கந்தைத் துணியதை விந்தைத் திருமகன்
காரணமாய் அணிந்தார்

தூதர் பறந்துவந்து - தேவ
துந்துமி மகிழ்பாட
மாதவ ஞானிகள் ஆயர்கள் பணிந்து
மங்களமொடு நாட

  • title
  • Name :
  • E-mail :
  • Type

© 2019 Waytochurch.com