• waytochurch.com logo
Song # 22243

keetham keetham jeya keetham கீதம் கீதம் ஜெய ஜெய கீதம் கைகொட்டிப் பாடிடுவோம்


கீதம் கீதம் ஜெய ஜெய கீதம் கைகொட்டிப் பாடிடுவோம்
இயேசு ராஜன் உயிர்த்தெழுந்தார் அல்லேலூயா
ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம் -ஆ . ஆ

1.பார் அதோ கல்லறை
மூடின பெருங்கல்
புரண்டு ருண்டோடுது பார் – அங்கு
போட்ட முத்திரை காவல் நிற்குமோ
தேவ புத்திரர் சந்நிதிமுன் (2) – ஆ ..ஆ

2.வேண்டாம் வேண்டாம் அழுதிட வேண்டாம்
ஓடி உரைத்திடுங்கள் – தாம்
கூறின மா மறை விட்டனர்
கல்லறை போங்கள் கலிலேயாவுக்கு

3.அன்னா காய்பா ஆசாரியர் சங்கம்
அதிரடி கொள்ளுகின்றார் – இன்ன பூத கணங்கள்
இடி ஒலி கண்டு பயந்து நடுங்குகின்றார்

4.வாசல் நிலைகளை உயர்த்தி நடப்போம்
வருகின்றார் ஜெய வீரன் – உங்கள்
மேள வாத்தியம் கைமணி பூரிகை
எடுத்து முழங்கிடுவோம்



Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com