• waytochurch.com logo
Song # 23484

nadathi kaapathun kadamai நடத்திக் காப்பதுன் கடமை


நடத்திக் காப்பதுன் கடமை
பல்லவி
நம்பினேன், உன தடிமை நான், ஐயா;-
திடப்படுத்தி என்றனை-
நடத்திக் காப்ப துன் கடமை தான், ஐயா
சரணங்கள்
உம்பரும்[1] புவி நண்பரும் மற்ற
உயிர்களும் பல பொருள்களும் தொழும்
தம்பிரானே, மெய் யம்பராபரா,
தாசன் மீது நன் னேசு அருள் செய். – நம்பி
சரணங்கள்
1. தீதாம் என் பாவம் யாவையும் பொறுத்து,-திருக் கருணையின்
அருள்
செய்து பின்வரும் இடர்களை அறுத்து,
வேதாந்தப்படி என்னைத் தான் வெறுத்து-நான் உனைப்பின்
செல்ல, உன்
மெய் அருளை என் உள்ளத்தில் நிறுத்து;
ஆதாரம் எனக்கார், உனை அன்றி?
அம்புவியில் யான் நம்ப வேறுண்டோ?-உன்
பாதா தாரத்தில் ஒதுங்கினேன்; எனைப்
பாரும், கிருபையைத் தாரும், ஐயனே! – நம்பி
2. சுத்த இருதயத்தினைத் தருவாய்-பரிபூரணானந்த
ஜோதி ஆவியின் நல்துணை அருள்வாய்,
நித்தமும் பய பக்தியைத் தருவாய்;-நான் ஊழியம்செய்ய,
நீதனே, எந்தன்முன்எழுந்தருள்வாய்;
அத்தனும் அனு கூலனுமான
பத்தனே; பரிசித்தனே, உனைப்
பாடினேன்; கிருபை சூடி ஆள், ஐயா! – நம்பி
3. ஊக்கமும் மனத்தீர்க்கமும் வேணும்,-சுவிசேஷ உரையை
உற்றுப் பார்த்ததில் தேறவும் வேணும்;
ஆக்கமும் அன்பர்ச் சேர்க்கையும் வேணும்;-உனக்கூழியம்
செய்ய
ஆவியும் அதின் ஈவதும் வேணும்?
ஏக்கமும் மனக்கவலையும் நித்ய
இன்பமுள்ள உன் அன்பின் நல்திரு
வாக்கையே நோக்கி இருப்பதால் என்முன்
வாரும், கிருபை தாரும், ஐயனே! – நம்பி

nadaththik kaappathun kadamai
pallavi
nampinaen, una thatimai naan, aiyaa;-
thidappaduththi entanai-
nadaththik kaappa thun kadamai thaan, aiyaa
saranangal
umparum[1] puvi nannparum matta
uyirkalum pala porulkalum tholum
thampiraanae, mey yamparaaparaa,
thaasan meethu nan naesu arul sey. – nampi
saranangal
1. theethaam en paavam yaavaiyum poruththu,-thiruk karunnaiyin
arul
seythu pinvarum idarkalai aruththu,
vaethaanthappati ennaith thaan veruththu-naan unaippin
sella, un
mey arulai en ullaththil niruththu;
aathaaram enakkaar, unai anti?
ampuviyil yaan nampa vaerunntoo?-un
paathaa thaaraththil othunginaen; enaip
paarum, kirupaiyaith thaarum, aiyanae! – nampi
2. suththa iruthayaththinaith tharuvaay-paripoorannaanantha
jothi aaviyin nalthunnai arulvaay,
niththamum paya pakthiyaith tharuvaay;-naan ooliyamseyya,
neethanae, enthanmuneluntharulvaay;
aththanum anu koolanumaana
paththanae; parisiththanae, unaip
paatinaen; kirupai sooti aal, aiyaa! – nampi
3. ookkamum manaththeerkkamum vaenum,-suvisesha uraiyai
uttup paarththathil thaeravum vaenum;
aakkamum anparch serkkaiyum vaenum;-unakkooliyam
seyya
aaviyum athin eevathum vaenum?
aekkamum manakkavalaiyum nithya
inpamulla un anpin nalthiru
vaakkaiyae nnokki iruppathaal enmun
vaarum, kirupai thaarum, aiyanae! – nampi

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com