siluvai kaatchi kaana vaaraai சிலுவைக் காட்சி காண வாராய்
சிலுவைக் காட்சி காண வாராய்
சிந்தின ரத்தம் ஓடுவதை பாரா
சரணங்கள்
1. அண்ணல் இயேசு உன் அதிபதியாக
இன்று ஏற்றுக்கொள் தள்ளிவிடாதே
இன்னல் ஏதும் உன்னைச் சேராதே
இன்றே வா (2) – சிலுவை
2. பாவியென் றெண்ணி தியங்காதே
பரன் இயேசுவை தள்ளிவிடாதே
பாவ தோஷம் எல்லாம் தீர்ப்பாரே
இன்றே வா (2) – சிலுவை
3. இன்று உன் ஜீவன் போனால்
உன் நித்திய வாழ்வெங்கே கழிப்பாய்
இதயம் திறந்தே ஏற்றுக் கொள்வாய்
இன்றே வா (2) – சிலுவை
4. உன் வாழ்க்கையின் வழி ஜீவன் இயேசு
உணர்ந்து அவரிடம் வந்து பேசு
உலக ரட்சகர் உன் இயேசு
இன்றே வா (2) – சிலுவை