• waytochurch.com logo
Song # 12548

undhan kayangal enthan உந்தன் காயங்கள் எந்தன் பாவங்களோ உந்தன் காயங்கள் எந்தன் பாவங்களோ


உந்தன் காயங்கள் எந்தன் பாவங்களோ
உந்தன் வேதனைகள் எந்தன் மீறுதலோ --2
எனக்காக உலகில் வந்தவரே
எந்தன் பாவங்கள் போக்க மரித்தவரே --2
உந்தன் அன்பை சொல்ல வார்த்தை இல்லை
உம்மை போல உலகில் யாரும் இல்லை

1. சாற்றில் கிடந்த எனக்காக பாவமானீரோ
நாற்றம் பிடித்த எனக்காக உம் அழகைத் துறந்தீரோ --2
உந்தன் ரத்தம் சிந்தி என் பாவம் கழுவினீர்
உம்மை பலியாய் தந்து என் பாதை மாற்றினீர் (2) - எனக்காக

2. உந்தன் நேசம் அறியாமல் நான் தூரம் சென்றேனே
உந்தன் பாசம் புரியாமல் நான் விலகிச்சென்றேனே -2
தேடிவந்தீர் என்னையும் வாழவைத்திட
எந்தன் பார சிலுவையை நீர் சுமந்திட (2) - எனக்காக

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com