ஆவியாலே ஆகுமே
Aaviyalae Aagumae
ஆவியாலே ஆகுமே(2)
பலத்தினாலே ஆகாதது
தேவ ஆவியாலே ஆகுமே – (2)
உந்தன் கண்ணீர் மாறிடும்
உந்தன் துக்கம் நீங்கிடும்(2)
மாரா மதுரமாய் மாறுமே
தேவ ஆவியாலே ஆகுமே ((2)
உந்தன் நிந்தை நீங்கிடும்
உந்தன் சிறுமை மாறிடும்
குறைகள் நிறைவாய் மாறுமே
தேவ ஆவியாலே ஆகுமே
உந்தன் தடைகள் விலகிடும்
உந்தன் நுகங்கள் முறிந்திடும்
சத்துரு கிரியைகள் அழியுமே
தேவ ஆவியாலே ஆகுமே