• waytochurch.com logo
Song # 13126

varuththapattu வருத்தப்பட்டு பாரம் சுமப்போரே


வருத்தப்பட்டு பாரம் சுமப்போரே
நீர் வந்திடுவீர் இயேசு அழைக்கின்றாரே

வந்திடுவீர் வந்திடுவீர்
வாழவைக்கும் நம் இயேசுவிடம்;

வறண்டு போன உந்தன் வாழ்க்கைதனை
வற்றாத நீரூற்றாய் மாற்றிடுவார்
லீலி புஷ்பம் போல மலர்ந்திடுவாய்;
லீபனோனைப்போல் வேரூன்றுவாய்(2) - வந்திடுவீர்


வானத்தின் பனியை கொடுத்திடுவார்
பூமியின் கொழுமையை தந்திடுவார்
கன்மலையின் தேனை புசிக்கசெய்வார்
கொழுத்த கன்றாக வளரச்செய்வார்(2) - வந்திடுவீh


கசந்துபோன உந்தன் வாழ்க்கைதனை
கனிதரும் வாழ்க்கையாய் மாற்றிடுவார்;
ஏலிமை போல செழிக்கசெய்வார்
எந்நாளும் வாழ்ந்து சுகித்திருப்பாய் - வந்திடுவீர்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com