Hand of God EnHand of God என் மேலே
Hand of God என் மேலே
நான் கேட்பதெல்லாம் பெற்றுக்கொள்வேன்
எஸ்ரா நான் நெகேமியா நான்
என் மேலே கர்த்தர் கரம்
எஸ்தர் நான் தேபோரால் நான்
என் மேலே கர்த்தர் கரம்
கொடுக்கும் கரம் (வழி) நடத்தும் கரம்
காக்கும் கரம் விலகாத கரம்
1. மனதுருகி குஷ்டரோகியை
தொட்டு சுகம் தந்தகரம்
நிமிரகூடாத கூனியை அன்று
நிமிரச் செய்த நேகர் கரம்
2. ஐந்து அப்பம் கையில் ஏந்தி
பெருகச் செய்த அற்புத கரம்
வாலிபனே எழுந்திரு என்று
பாடையைத் தொட்டு எழுப்பின கரம்
3. தலித்தாகூம் என்று சொல்லி
மரித்தவனை தூக்கி நிறுத்தின கரம்
வெட்டப்பட்ட காதை அன்று
ஒட்ட வைத்த கர்த்தர் கரம்
4. எலிசா மேல் அமர்ந்த கரம்
இறைவாக்கு சொல்ல வைத்த கரம்
இரத்தத்திற்கு முன் எலியாவை
ஓடவைத்த தெய்வ கரம்