ஆதரவாயாருமில்ல எனக்கிந்த உலகத்துல
Aadharavaa Yaarumillai
ஆதரவாயாருமில்ல எனக்கிந்த உலகத்துல - 2
உம்மைபற்றி கேள்விப்பட்டேன்
உடனடியா ஓடிவந்தேன் (3)
ஏற்றுக்கொள்ளுமய்யா மன்னித்து
ஏற்றுக்கொள்ளுமய்யா
சேர்த்துக்கொள்ளுமய்யா சபையினில்
சேர்த்துக்கொள்ளுமய்யா (2)
ஆதரவாயாருமில்ல எனக்கிந்த உலகத்துல - 2
BGM
1. தனிமையில் நானும் தள்ளப்பட்டேனே
உறவுகளால் நான் ஒதுக்கப்பட்டேனே (2)
சஞ்சலத்தினாலே கண்கள் இருளடைந்து போனதே
பெலனற்ற என்சரீரம் சோர்வடைந்து போனதே (2)
கலங்கி தவித்தேன் காப்பாற்றிடுமே
வருந்தி அழைத்தேன் எனக்கு வழிகாட்டிடுமே (2)
ஏற்றுக்கொள்ளுமய்யா மன்னித்து
ஏற்றுக்கொள்ளுமய்யா
சேர்த்துக்கொள்ளுமய்யா சபையினில்
சேர்த்துக்கொள்ளுமய்யா (2)
ஆதரவாயாருமில்ல எனக்கிந்த உலகத்துல - 2
BGM
2. பாவத்தில் மூழ்கி நான் தவித்தேனே
பரமனே உன்னை தேடிவந்தேனே (2)
பாவினான் பூமியிலே மண் புழுவாய் துடிக்கிறேன்
பரலோக வாசல் வர வாஞ்சையோடு இருக்கிறேன் (2)
ஒருநாள் தேவா நான் உம்மை அடைவேன்
என் வாழ்நாள் வரையில் நான் உம்மோடிருப்பேன் (2)
ஏற்றுக்கொள்ளுமய்யா மன்னித்து
ஏற்றுக்கொள்ளுமய்யா
சேர்த்துக்கொள்ளுமய்யா சபையினில்
சேர்த்துக்கொள்ளுமய்யா (2)
ஆதரவாயாருமில்ல எனக்கிந்த உலகத்துல - 2