இன்னும் ஒருமுறை
Innum Orumurai Innum Orumurai
இன்னும் ஒருமுறை (2)
மன்னிக்கவேண்டும் தேவா 
என்று பலமுறை (2)
வந்துவிட்ட இயேசு ராசா x (2)
1. ஒத்தையில போகையில 
கூடவந்தவரும் நீர்தான் 
தட்டுத்தடுமாரயில 
தாங்கிப்பிடிச்சவரும் நீர் தான் x (2)
ஓடி ஒடி ஒளிஞ்சேனே
தேடி தேடி வந்து மீட்டீர் 
இருளில் இருந்து தூக்கி 
ராஜ்யத்தின் பங்காய் சேர்த்தீர் 
-இன்னும் ஒருமுறை
2. பச்சையினு எண்ணி நானும் 
இச்சையால விழுந்தேன் 
பஞ்சு மெத்தையினு நம்பி 
முள்ளுக்குள்ள தான் படுத்தேன் x (2)
புத்திகெட்டு போனதால 
பாதைமாறி போனேன் 
நல்ல மேய்ப்பன் இயேசுதானே 
காயம் கட்டி அனைத்தீர் 
-இன்னும் ஒருமுறை
3. என் சொத்து சுகம் 
நீங்க தான்னு 
புரியாமல் நானே 
சந்துருவின் சதியாலே 
தூரமாகி போனேன் x (2)
தகப்பன் வீட்டை நினைத்தேன் 
தந்தையின் நேசத்தை உணர்ந்தேன் 
தாமதமின்றி வருவேன் 
நித்தமும் தங்கி மகிழ்வேன் 
இன்னும் ஒருமுறை (2)
மன்னிக்கவேண்டும் தேவா 
என்று பலமுறை (2)
வந்துவிட்ட இயேசு ராசா x (2)

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter