நான் ஒரு சின்ன குழந்தை
நான் ஒரு சின்ன குழந்தை
என் கைகளில் அப்பமும் மீனும்
அன்புடனே அதனைக் கேட்கும்
இயேசுவிடம் கொடுத்துவிட்டேன்
1. சின்னசிறு துண்டுகளாய் அதைப் பிரித்து
ஐயாயிரம் பேருக்கு அதை பகிர்ந்தளித்தார்
அன்புடனே என்னை அவர் கரம்பிடித்து
அனைத்துமே எனக்கவர் முத்தம் கொடுத்தார்
2. வாழ்கையில் இனி என்றும் பயமில்லையே
வழி காட்ட இயேசு என்றும் எந்தன் துணையே
கன்மலையில் என்னை அவர் கொண்டு நிறுத்தி
மகிமையில் என்னை அவர் அபிஷேகிப்பார்