Aarathanai Aarathanai Vallavare Nallavare – ஆராதனை ஆராதனை வல்லவரே
ஆராதனை ஆராதனை வல்லவரே நல்லவரே
ஆராதனை ஆராதனை அற்புதரே அதிசயமே
உந்தன் நாமம் உயர்த்தியே பாடிடுவேன்
உயிருள்ள நாளெல்லாம்
1. பாவங்கள் எனக்காய் சுமந்தவரே
உமக்கே ஆராதனை
பாடுகள் எனக்காய் சகித்தவரே
உமக்கே ஆராதனை
2. ஆவியின் வரங்களைத் தந்தவரே
உமக்கே ஆராதனை
அபிஷேகம் எனக்காய்த் தந்தவரே
உமக்கே ஆராதனை
3. மரணத்தை எனக்காய் ஜெயித்தவரே
உமக்கே ஆராதனை
பாதாள வல்லமை தகர்த்தவரே
உமக்கே ஆராதனை