• waytochurch.com logo
Song # 14352

அன்பின் தேவன் இயேசு

Anbin Devan Yesu Unnai Azhaikirar


அன்பின் தேவன் இயேசு உன்னை அழைக்கிறார்
அவரின் குரலைக் கேட்ட பின்னும் தயக்கமேன்
கல்வாரியின் மேட்டினில் கலங்கும் கர்த்தர் உண்டல்லோ
கவலையேன் கலக்கமேன் கர்த்தர் இயேசு அழைக்கிறார்
உன்னை எண்ணி உள்ளம் நொந்து அணைக்க இயேசு துடிக்கிறார்


1. மனிதர்கள் அன்பு மாறலாம்
மறைவாக தீது பேசலாம்
அன்பு காணா இதயமே
அன்பின் தேவனை அண்டிக்கொள்


2. வியாதிகள் தொல்லைகள் தோல்வியோ
வாழ்க்கையில் என்ன ஏக்கமோ
கண்ணீர்தான் உந்தன் படுக்கையோ
கலங்காதே – மன்னன் இயேசு பார்


3. வேலை வசதிகள் இல்லையோ
வீட்டினில் வறுமை தொல்லையோ
மரண பயமும் நெருங்குதே
மரணம் வென்ற இயேசு பார்



                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com