• waytochurch.com logo
Song # 14362

அதிகாலையில் சூரியனை

Athi Kaalaiyil Sooriyanai


அதிகாலையில் சூரியனை பார்க்கையிலே
என் தேவன் உறங்காதவர் என்று நான் அறிவேன்
நான் குருவிகள் குரலை கேட்கையில் என் தேவனும் கேட்கிறார்
என் பயமறிவார் கண்ணீர் காண்பார் அழுகையும் துடைத்திடுவார்


எனக்கொரு தேவன் உண்டு
அவர் என்னை காண்கின்றார் – அவர்
என்றென்றும் என்னை காண்கின்றார்
என்னை காண்கின்றார்


எல்ரோயீ எனை காணும் தேவனே – (2)
(என்னை காணும் தேவன்)
எல்ரோயீ எனை காணும் தேவனே – (2)
(என்னை காண்கின்ற தேவன்)


மேகம் கடப்பதை காண்கையில் நான் மனதில் ஜெபிக்கின்றேன்
இந்த உலகத்தின் மாயைகள் என்னை மேற்கொள்ளக் கூடாது
நதிகள் புரள்வதை காண்கையில் நான் எதற்கும் அஞ்சிடேன்
அவர் அன்பு என்றும் மாறாது என்றும் நமக்குண்டு



                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com