ஆயன் இயேசு கூட இருக்க
Ayan Yesu Kuda Iruka
ஆயன் இயேசு கூட இருக்க
எனக்கு கவலையில்ல
கையப் புடிச்சுக் கூட நடக்க
யாரும் தேவையில்ல (2)
1. அமைதி நீர் நிலைக்கு என்னை
அழைத்துச் சென்றிடுவார்
பசும்புல் தினம் எனக்கு
பரமன் தந்திடுவார் – ஆயன்
2. இருட்டு பயமில்ல எனக்கு
எதிரி பயமில்ல
கோலும் கைத்தடியும் எனக்கு
காலமும் இருக்கும் – ஆயன்