• waytochurch.com logo
Song # 14378

Balan Koduppeer – பலன் கொடுப்பீர்


பலன் கொடுப்பீர்
பல்லவி


பலன் கொடுப்பீர் நல்ல பலன் கொடுப்பீர்
பண்பட்ட நிலம் போல் பலன் கொடுப்பீர்


அனுபல்லவி
வழியோரமா? நான் கற்பாறையா?
முள் புதரா? நான் நல்ல நிலமா? – ..பலன்


1. இறைவனின் வார்த்தை விதையாகும்
அறியா உள்ளம் வழியோரம்
பறவைகள் விரைந்தே தின்பது போல்
பகைவனாம் தீயோன் பறித்திடுவான் – ..பலன்


2. மண்ணிலா பாறை நிலமாகும்
மனதில் நிறையற்ற மனிதர்களே
வேரற்ற வாழ்க்கை வாழ்வதினால்
வெயிலில் வார்த்தை கருகி விடும் – ..பலன்


3. முட் செடி புதராம் மனுவுள்ளம்
முளைத்திடும் ஆசைகள் நெறிந்திடவே
இறைவனின் வார்த்தை வளரவில்லை
இறுகியே ஆசைகள் கொன்றதினால் – ..பலன்


4. இறைவனின் வார்த்தை உணர்ந்திடுவோர்
குறையில்லா பண்பட்ட நிலமாகும்
அறுபது முப்பது நூறு என்றே
அறுவடை எடுப்பார் தம் வாழ்வில் – ..பலன்



                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com