Desame Payapadathey – தேசமே பயப்படாதே
தேசமே பயப்படாதே
மகிழ்ந்து களிகூரு
சேனையின் கர்த்தர் உன் நடுவில்
பெரிய காரியம் செய்திடுவார்
1. கசந்த மாரா மதுரமாகும்
கொடிய எகிப்து அகன்றிடும்
நித்தமும் உன்னை நல்வழி நடத்தி
ஆத்துமாவை தினம் தேற்றிடுவார்
2. ஆற்றலாலும் அல்லவே
சக்தியாலும் அல்லவே
ஆவியினாலே ஆகும் என்று
ஆண்டவர் வாக்கு அருளினாரே