Deva Aaviye Yengal – தேவ ஆவியே எங்கள்
Deva Aaviye Yengal
தேவ ஆவியே!
எங்கள் தூய ஆவியே!- 2
உமது வல்லமையால் எங்களை நிரப்புமே!
உமது வல்லமையே இன்றே நிரப்புமே! – தேவ
1. துக்கத்தை மாற்றியே – ஆனந்த
தைலத்தால் நிரப்புமே!
தாகத்தை தீர்த்திடும்
ஜீவ தண்ணீரும் நீரே!-2 – தேவ
2. அனலாக ஜொலித்திட
உந்தன் அபிஷேகம் ஊற்றுமே -2
எழும்பிப் பிரகாசிக்க
புதிய எண்ணெயால் நிரப்புமே – 2 – தேவ
3. உலகத்தின் சாட்சியாய் எந்தன்
உயிருள்ள நாளெல்லாம் -2
உமக்காய் வாழ்ந்திட
உம் பெலனால் நிரப்புமே -2 – தேவ