தேவ ஜனமே மகிழ்ந்து களிகூறு
Deva Janame Magizndu Kalikooru
Deva Janame Magizndu Kalikooru
தேவ ஜனமே
மகிழ்ந்து களிகூறு
பயங்கள் நீக்கி துதிபாடு
இரட்சகர் உன்னை நேகிக்கிறார்
இரட்சித்து உன்னை காத்திடுவார்
1. சிருஷ்டிகரே உன் நாயகர்
கர்த்தர் என்பது அவர் நாமம்
பரிசுத்த தேவன் உன் மீட்பர்
சர்வ பூமிக்கும் அவரே தேவன்
2. நித்திய காலத்து நீதியை
நிலையாக உன்னில் ஸ்தாபிக்கிறார்
காத்தரின் கரத்தின் கிரீடமும்
இராஜ முடியும் நீ ஆவாய்
3. கைவிடப்பட்டவள் நீ அல்ல
பாழான தேசம் நீ அல்ல
எப்சிபா பியூலா
என்று சொல்லும்
புதிய வாழ்வைப் பெற்றிடுவாய்