• waytochurch.com logo
Song # 14429

Devanuke Magimai – தேவனுக்கே மகிமை


தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை
தேடி வந்து மீட்டவரே தினம் உமக்கே மகிமை
ஐயா வாழ்க வாழ்க உம்நாமம் வாழ்க


1. உன்னத்தில் தேவனுக்கே
மகிமை உண்டாகட்டும் – இந்தப்
பூமியிலே சமாதானமும்
பிரியமும் உண்டாகட்டும் – ஐயா
2. செவிகளை நீர் திறந்து விட்டீர்
செய்வோம் உம் சித்தம் – இந்தப்
புவிதனில் உம் விருப்பம்
பூரணமாகட்டும் – ஐயா
3. எளிமையான எங்களையே
என்றும் நினைப்பவரே – எங்கள்
ஒளிமயமே துணையாளரே
உள்ளத்தின் ஆறுதலே – ஐயா
4. தேடுகிற அனைவருமே
மகிழ்ந்து களிகூரட்டும் – இன்று
பாடுகிற யாவருமே
பரிசுத்தம் ஆகட்டுமே – ஐயா
5. குறை நீக்கும் வல்லவரே
கோடி ஸ்தோத்திரமே – பாவக்
கறைபோக்கும் கர்த்தாவே
கல்வாரி நாயகனே – ஐயா



                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com