En Aandavar En Ratchaga – என் ஆண்டவா என் ரட்சகா
என் ஆண்டவா என் ரட்சகா
என் மேய்ப்பரே என் மீட்பரே
நீரே வழியும் நீரே சத்தியம் நீரே ஜீவனுமாம் – எனக்கு
1. துக்கம் வந்து நெருக்கி
என்னை சூழ்ந்து கொள்ளும் நேரம்
உம் பக்கம் வந்து நிற்பேன்
என்னை மகிழ்ச்சி ஆக்குவீர்
2. சத்துரு கூட்டங்கள் நெருக்கி
என்னை சூழ்ந்து கொள்ளும் நேரம்
உம் சமூகம் வந்து சொல்வேன்
நீர் யுத்தம் செய்திடுவீர்
3. என் வாழ்வினில் வந்திடும் தடைகளால்
நான் முன்னேற முடியாத நேரம்
உம் சமூகம் வந்து துதிப்பேன்
என்னை முன்னேற செய்திடுவீர்