என் ஆத்ம நேசரே
En Aathma Nesare
என் ஆத்ம நேசரே
என் அன்பு இயேசுவே
உம்மை நான் போற்றுவேன்
என்றென்றுமாய் (2)
உம் அன்பினைப் போல
நான் கண்டதில்லையே
உலகத்தில் சொல்வேன்
உற்சாகமாய் (2)
1. பாவியான என்னையும் பரிசுத்தமாக்கினீர்
பாசம் கொண்டு அன்பு வைத்தீரே
வெறுமையான என்னையும் வெற்றி வீரன் ஆக்கினீர்
வெட்கமின்றி உம்மைப் பாடுவேன் (2) – என் ஆத்ம
2. வாழவைப்பேன் என்றீரே வாக்குத்தத்தம் தந்தீரே
வாழ்வின் துணையாக நின்றீரே
மகிமையான மீட்பினால்
என்னை சொந்தம் கொண்டீரே
மரணத்தை எனக்காய் வென்றீரே (2) – என் ஆத்ம
3. அழிவில்லாத செல்வத்தை அளவில்லாமல் தந்தீரே
அன்பரே உமக்காய் வாழ்ந்திட
முடிவில்லாத இன்பத்தை முழுமையாக தந்தீரே
மீட்பரே உம் துதிகள் (புகழை) பாடிட (2) – என் ஆத்ம
4. அன்பின் ஆழம் அகலமோ நீளம் உயரமோ
யாரும் அளந்திடாதது (அறிந்திடாதது)
மாறிடாத அன்பிது என்னைத் தேடி வந்தது
முற்றும் ஜெயம் கொள்ள வைத்தது (2) – என் ஆத்ம

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter