என் ஆத்தும நேச மேய்ப்பரே
En Aathuma Nesa Maipare
என் ஆத்தும நேச மேய்ப்பரே
என் உள்ளத்தின் ஆனந்தமே
இன்னும் உம்மைக் கிட்டிச் சேர நான்
வாஞ்சையோடு சமீபிக்கிறேன்
பேசும் பேசும் ஜெபம் செய்யும் போது
ஆண்டவா பிரியமானதை
இப்போ காட்டும் செய்ய ஆயத்தம்
1. மெய் மீட்பரைக் கீழ்ப்படிவோர்
ஆத்துமத்தைத் தேற்றும் இடம்
அடியேனும் பெற அருள்வீர்
அப்பனே விண்ணப்பம் கேட்டிடும் – பேசும்
2. பாவிகட்கு உமது அன்பை
என் நடையாற் காட்டச்செய்யும்
கல்வாரி ஆவியாலென் உள்ளத்தைப்
போரில் வெல்ல அபிஷேகியும் – பேசும்
3. என் ஜீவிய நாட்களெல்லாம்
நீர் சென்ற பாதையில் செல்வேன்
ஆசித்துத் தாரேன் எனதெல்லாம்
மீட்பரே வல்லமை தந்திடும் – பேசும்

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter