En Janagal Oru Pothum – என் ஜனங்கள் ஒரு போதும்
என் ஜனங்கள் ஒரு போதும் வெட்கப்பட்டு போவதில்லை ……
எப்பக்கம் உன்னை நெருக்கினாலும்
எதிரிகள் உன்னை துரத்தினாலும்
உன்னோடு கூட நான் இருப்பதனால்
நீ வெட்கப்பட்டு போவதில்லை
1. வியாதிகள் வேதனை தொடர்ந்தாலும்
பெலவீனத்தால் நீ சோர்ந்தாலும்
பரிகாரியாய் நான் இருப்பதினால்
நீ வெட்கப்பட்டு போவதில்லை
2. ஏமாற்றம் தோல்விகள் வந்தாலும்
குறைவுகளால் மனம் கலங்கினாலும்
உனக்காக யாவையும் செய்திடுவேன்
நீ வெட்கப்பட்டு போவதில்லை