Ennai Azhaithavar Neer – என்னை அழைத்தவர் நீர்
என்னை அழைத்தவர் நீர் என்று சொன்னால்
நடத்துபவர் நீர் தானே
என்னை கண்டவர் நீர் என்று சொன்னால்
பாதுகாப்பவர் நீர் தானே (2)
நம்புவேன் என்னை நடத்திடும்
எந்தன் ஜீவிய காலமெல்லாம் (2)
1. உந்தன் முகத்தின் வெளிச்சம்
எந்தன் மேல் பிரகாசிக்க செய்யுமே
இருள் நிறைந்த உலகமிதுவே
நீதி தேவன் எனக்கு அரனே (2)
முன்னறிந்து என்னை நடத்தி வந்தீர்
முடிவு வரையும் நடத்திடுமே (2)
நம்புவேன் என்னை நடத்திடும்
எந்தன் ஜீவிய காலமெல்லாம் (2)
2. மாம்சமான எந்தன் மேல்
உம் ஆவியை ஊற்றுமே
உமக்காக எழும்பிட
நல்ல சாட்சி என்னில் வேண்டுமே (2)
நம்புவேன் என்னை நடத்திடும்
எந்தன் ஜீவிய காலமெல்லாம் (2)
3. என்னை அழைத்தவர் நீர் என்று சொன்னால்
நடத்துபவர் நீர் தானே
என்னை கண்டவர் நீர் என்று சொன்னால்
பாதுகாப்பவர் நீர் தானே (2)
நம்புவேன் என்னை நடத்திடும்
எந்தன் ஜீவிய காலமெல்லாம் (2)