En Kirubai Unakku Pothum – என் கிருபை உனக்கு போதும்
என் கிருபை உனக்கு போதும்
இந்த மண்ணில் வேறு என்ன வேண்டும் சொல்
ஒருபோதும் உன்னை மறவேன்
உன் நிழலைப் போல உன்னை தொடர்வேன் நான்
1. அமைதி தோட்டமாக நானும் உலகை உனக்கு கொடுத்தேன்
ஜாதி பூக்கள் வளர்த்தாய் நீயும் யுத்தம் நாளும் தொடுத்தாய்
கண்ணீருக்கும் செந்நீருக்கும் உன்னை நீ அடகு வைத்தாய் – (2)
சிலுவையின் வழி மீட்பு என்றேன் சிந்தையில் நீ ஏற்கவில்லை
விழுதுகள் என்று நான் நினைத்த மனிதர்கள் என்னை சார்ந்ததில்லை
என்ன நடந்தாலும் ஜெபிப்பதில்லை என்னை நீ நினைப்பதில்லை – என்
2. ஒளியை ஏற்றி வைத்தேன் நீயோ இருளை தேடிச் சென்றாய்
வழியை திறந்து வைத்தேன் நீயோ விழிகள் மூடிக்கொண்டாய்
என் ராஜ்ஜியம் எங்கே என்று மண்ணில் நீ தேடுகின்றாய் – (2)
தந்தைக்கு நான் கீழ்ப்படிந்தேன் நிந்தைகளை ஏற்றுக்கொண்டேன்
என்றைக்குமே ஆட்சி செய்வேன் நீதியை நிலை நாட்டச் செய்வேன்
போனது போகட்டும் மறந்துவிடு இன்றோடு மாறிவிடு – என்