என் மீட்பர் சென்ற பாதையில்
En Meetpar Sendra Paathyil
என் மீட்பர் சென்ற பாதையில்
நீ செல்ல ஆயத்தமா
கொல்கதா மலை வாதையில்
பங்கைப் பெறுவாயா
சிலுவையை நான் விடேன் (5)
சிலுவையை(2) நான் விடேன்
2. ஊரார் இனத்தார் மத்தியில்
துன்பம் சகிப்பாயா
மூர்க்கர் கோபிகள் நடுவில்
திடனாய் நிற்பாயா
3. தாகத்தாலும் பசியாலும்
தோய்ந்தாலும் நிற்பாயா
அவமானங்கள் வந்தாலும்
சிலுவை சுமப்பாயா
4. பாவாத்மாக்கள் குணப்பட
நீ தத்தம் செய்வாயாசெய்வாயாகோழை நெஞ்சர் திடப்பட
மெய்யுத்தஞ் செய்வாயா
5. வாழ்நாளெல்லாம் நிலை நின்று
சிலுவையை சுமப்பேனே
தேவ அருளினால் வென்று
மேல் வீட்டைச் சேருவேனே

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter