En Nesar Ennudayavar – என் நேசர் என்னுடையவர்
என் நேசர் என்னுடையவர்
நான் என்றென்றும் அவருடையவன்
சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
என்னையும் கவர்ந்து கொண்டவரே
தம் நேசத்தால் என்னையும்
கவர்ந்து கொண்டவரே
அவர் வாயின் முத்தங்களால்
என்னை அனுதினமும் முத்திமிடுகிறார்
திராட்சை ரசத்திலும் உங்க நேசமே
அது இன்பமும் மதுரமானது
அவர் முற்றிலும் அழகுள்ளவர்
இவரே என் சிநேகிதர்
விருந்துசாலைக்குள்ளே என்னை
அழைத்து செல்கிறார்
என்மேல் பறந்த கொடி நேசமே