• waytochurch.com logo
Song # 14499

En Nesar Vellai Pola – என் நேசர் வெள்ளைப் போள


என் நேசர் வெள்ளைப் போளச் செண்டு
என் அன்பர் மரிக்கொழுந்து பூங்கொத்து
நான் அவர்க்குள் மலர்ந்து மணக்கும் ரோஜாவே
பள்ளத்தாக்கின் லீலி புஷ்பமே – நான் (2)


அருமையானவர் எந்தன் நேசர்
இன்பமானவர் ஆத்ம நேசர்
மதுரமானவர் எந்தன் நேசர்
பிரியமானவர் மதுரமானவர் – என் நேசர்


1. காட்டு மரங்களுக்குள்ளே கிச்சிலி
மரம் போல் ஆனவர் இவர்
கன்மலைக் குன்றின் வெடிப்பிலே
ஓடிவரும் மானுக்கு சமானமாவார் – என் நேசர்


2. வெண்மையும் சிவப்புமானவர்
புறாவின் கண்கள் கொண்டவர் அவர்
கேதுரு மரம்போல் ஆனவர்
பதினாயிரம் பேரில் சிறந்தவராவார் – என் நேசர்



                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com