En Pavangal En Yesu – என் பாவங்கள் என் இயேசு
என் பாவங்கள் என் இயேசு மன்னித்து விட்டார்
தன் மகனாய் என் இயேசு ஏற்றுக் கொண்டார்
1. இனி நான் பாவியல்ல
பரிசுத்தமாகிவிட்டேன்
நேசரின் பின் செல்வேன் – நான்
திரும்பி பார்க்க மாட்டேன்
2. ஆழ்கடலில் எறிந்துவிட்டார்
காலாலே மிதித்து விட்டார்
நினைவுகூர மாட்டார் – என்
நேசரைத் துதிக்கின்றேன் – இனி
3. கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றேன்
மறுபடி பிறந்துவிட்டேன்
பழையன கழிந்தனவே – நான்
புதியன படைப்பானேன்