En Vaazhvil Yesuve – என் வாழ்வில் இயேசுவே
என் வாழ்வில் இயேசுவே எந்நாளும் இங்கே
எல்லாமும் நீயாக வேண்டும்
எந்தன் எல்லாமும் நீயாக வேண்டும்
சோகங்கள் பாராமல் நான் வாழும் போது
தாயாக நீ மாற வேண்டும்
அன்புத் தாயாக நீ மாற வேண்டும்
பாரங்கள் தாங்காமல் நான் சாயும் போது
பாதங்கள் நீயாக வேண்டும்
எந்தன் பாதங்கள் நீயாக வேண்டும்
காலங்கள் எல்லாம் என் நெஞ்சின் வீட்டில்
தீபங்கள் நீயாக வேண்டும் சுடர் தீபங்கள் நீயாக வேண்டும்
தாகங்கள் தீராமல் நான் ஏங்கும் போது
மேகங்கள் நீயாக வேண்டும்
மழை மேகங்கள் நீயாக வேண்டும்