• waytochurch.com logo
Song # 14512

En Yesu Unnai – என் இயேசு உன்னைத்


என் இயேசு உன்னைத் தேடுகிறார்
இடமுண்டோ மகனே உன் உள்ளத்தில்


1. கதறிடும் உன்னைப் பார்க்கின்றார்-உன்
கண்ணீரைத் துடைக்க வருகின்றார்
உதவிடும் கரத்தை நீட்டுகிறார்-உன்
உள்ளத்தில் வாழத் துடிக்கின்றார்
2. சிலுவை மரணம் உனக்காக
சிந்திய திரு இரத்தம் உனக்காக
உன் பாவம் சுமந்து தீர்த்தாரே – தன்
உயிர் தந்து உன்னை மீட்டாரே
3. மார்த்தாள் வீட்டில் இடம் கொடுத்தாள்
மரித்த லாசரை மீண்டும் கண்டாள்
கலங்கிடும் மனிதா வருவாயா – என்
கர்த்தரின் பாதம் விழுவாயா
4. சகேயு உடனே இறங்கி வந்தான்
சந்தோஷமாக வரவேற்றான்
பாவங்கள் அனைத்தும் அறிக்கை செய்தான்
பரலோக இன்பம் பெற்றுக் கொண்டான்
5. பேதுரு படகில் இடம் கொடுத்தான்
பெரும் தோல்வி மாறி மகிழ்வடைந்தான்
அதிசய தேவனை கண்டு கொண்டான்-என்
ஆண்டவன் பின்னே நடந்து சென்றான்



                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com