என்னை வல்லடிக்கு நீக்கி
Ennai Valladikku Neeki
என்னை வல்லடிக்கு நீக்கி உம் கரங்களால் தூக்கி
என்னை வல்லடிக்கு நீக்கி உம் கரங்களால் தூக்கி
உன்னதத்தில் வைத்ததை மறப்பேனோ
நீர் சொன்னதினால் நான் பிழைத்துக்கொண்டேன்
நீர் கண்டதினால் நான் ஜீவன் பெற்றேன்
எங்கள் ஆதரவே எங்கள் அடைக்கலமே
எங்கள் மறைவிடமே. உம்மை ஆராதிப்பேன்
1. ஆழத்தில் இருத்தென்னை தூக்கிவிட்டீர்
உயர்வான தளங்களில் நிறுத்தி வைத்தீர்
எதிரான யோசனை அதமாக்கினர்
உந்தனின் யோசனை நிறைவேற்றினீர் – எங்கள்
2. ஆயிரம் என்னோடு போரிட்டாலும்
என்னை மேற்கொள்ளும் அதிகாரம் பெறவில்லையே
கிருபையினால் என்னை மூடிக்கொண்டீர்
நான் தள்ளுண்ட இடங்களில் உயர்த்தி வைத்தீர்
3. கரடான பாதையில் தூக்கிச் சென்றீர்
முள்ளுள்ள இடங்களில் சுமந்து கொண்டீர்
எனக்காக குறித்ததை எனக்கு தந்தீர்
நீர்தந்த தரிசனம் நிறைவேற்றினீர் – எங்கள்