Enthan Aathumave Kartharaiye – எந்தன் ஆத்துமாவே கர்த்தரையே
எந்தன் ஆத்துமாவே கர்த்தரையே
என்றென்றும் ஸ்தோத்தரி
முழு உள்ளத்தோடு
கர்த்தரையே
உயர்த்தி பாடிடு
புதிய நாளிது ஸ்தோத்திரம் செய்வேன்
ஆராதிப்பேன் நான் உம்மையே
என்ன நடந்தாலும் ,எது நேரிட்டாலும்
நாளெல்லாம் பாடி உம்மை உயர்த்திடுவேன்
நித்திய தேவனே என் அருள் நாதா
உம் நாமத்தை நான் போற்றுவேன்
உந்தன் அன்பினை போற்றியே பாடி
வாழ்நாளெல்லாம் நான் உயர்த்திடுவேன்
மரண வாசலில் நின்றிடும் நேரம்
பரலோக வாசலில் சேர்ந்து நான்
உமது துதியை பாடுவேன் என்றும்
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்