Enthan Devanal Enthan Devanal – எந்தன் தேவனால்
எந்தன் தேவனால் எந்தன் தேவனால்
நிச்சயம் நான் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளுவேன்
உந்தன் வசனம் கைக்கொள்ளுவேன் நான்
உந்தன் வழிகளில் நடந்திடுவேன்
1. தேசத்தில் நான் ஆசீர்வாதமாயிருப்பேன்
வேலையிலும் ஆசீர்வாதமாயிருப்பேன்
என் வீட்டில் ஆகாரக் குறைவில்லையே
என் தேவைகள் ஒன்றும் தடையில்லையே – எந்தன்
2. எனக்கெதிராய் வரும் ஆயுதமெல்லாம்
நிர்மூலமாய் போய்விடும் எந்தன் தேவனால்
என் பெலன் ஆரோக்கியம் தேவதானமே
எந்தன் சரீரம் ஆசீர்வதிக்கப்படும் – எந்தன்
3. வாழ்கைத் துணையும் என் பிள்ளைகளும்
எந்தன் சம்பத்தும் ஆசீர்வதிக்கப்படும்
எந்தன் நன்மைக்காய் செழித்தோங்கிடச் செய்வார்
என்னையவர் பரிசுத்த ஜனம் ஆக்குவார் – எந்தன்
4. இனி என்றும் கடன் வாங்க விடமாட்டார்
கொடுத்ததை செழித்தோங்கச் செய்திடுவார்
உயர்வடைவேன் என் வாழ்க்கையிலே
உன்னதங்களில் என்னை உயர்த்திடுவார் – எந்தன்