Ethai Ninaithum – எதை நினைத்தும்
எதை நினைத்தும் நீ கலங்காதே மகனே
யேகோவா தேவன் உன்னை நடத்திச்
செல்வார் (2)
1. இதுவரை உதவின எபிநேகர் உண்டு
இனியும் உதவி செய்வார் – 2
2. சுகம் தரும் தெய்வம் யேகோவா ரஃப்பா
உண்டு
பூரண சுகம் தருவார்
3. புதுபெலன் அடைந்து சிறகுகளை விரித்து
உயர பறற்திடுவாய் மடிந்து போவதில்லை
4. பூரண அன்ப பயத்தை புறம்பே தள்ளும்
அன்பிலே பயமில்லை
5. கர்த்தரை நினைத்து மகிழ்ந்து
களிகூர்ந்தால்
உனது விருப்பம் செய்வார்
6. வழிகளிளெல்லாம் அவரையே நம்பியிரு
உன் சார்பில் செயலாற்றுவார்
7. வலுவூட்டும் இயேசுகிறிஸ்துவின்
துணையால்;
எதையும் செய்திடுவாய்