Neenga Mattum illennaநீங்க மட்டுமில்லேனா எங்கோ நான் சென்றிருப்பேன்
நீங்க மட்டுமில்லேனா, எங்கோ நான் சென்றிருப்பேன்
எப்படியோ வாழ்ந்திருப்பேன்; மண்ணுக்குள்ள போயிருப்பேன்
மறந்தும் போயிருப்பார்; மறந்தே போயிருப்பார் நீங்க மட்டுமில்லேனா!!!!!! நான் பிறந்த நாள் முதல், இந்த நாள் வரையிலும், ஆதரித்து வந்தீரே; ஆறுதல் தந்தீரே எப்படி சொல்;வேன் என்னென்ன சொல்வேன் நீர் செய்ததை ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணமுடியாதே - நீங்க மட்டுமில்லேனா எத்தனையோ கேள்விகள் ஏதேதோ ஏக்கங்கள் சொல்லவும் முடியலே சொல்லி அழ யாருமில்ல எப்படி சொல்வேன் எல்லாவற்றையும் நீர் மாற்றினீர் நிம்மதி தந்து நித்தம் நடத்தி வாழ வைக்கின்றீர் - நீங்க மட்டுமில்லேனா ... சொந்தமென்று சொல்லிக்கொள்ள யார் யாராரோ இங்கு உண்டு ஏனென்று கேட்டிட யாருமிங்கே வரவில்லை எப்படி சொல்வேன் என்னையும் தேடி நீர் வந்ததை தோளின் மீது சுமந்துக்கொண்டு நடத்தி வருவதை - நீங்க மட்டுமில்லேனா ...