• waytochurch.com logo
Song # 14651

தீர்க்கன் உரைத்த தீர்க்கமே

THEERKAN URAITHA THEERKAMAE


தீர்க்கன் உரைத்த தீர்க்கமே !!
ஆகம நிறைவேற்றமே !!
இஸ்ரவேலின் பாடலே !!
பூர்வகாலத் தேடலே !!

எந்தன் முகவரி சேர்ந்ததே !!
புறஜாதி என்னை மீட்டதே !!

மீட்பின் இராகம் என்னுள் இசைக்க காரணர்!!
இவரையன்றி வேறு ஏது இரட்சகர் !!
இவருக்கீடு வேறில்ல - இவர்
நாமத்திற்கு இணையில்ல …எந்தன் இயேசுவே….

தமது சாயலை மனிதனில்
நம் தேவன் வைத்தது அதிசயம் !!
தேவன் தாமே படைத்ததை அவன்
ஆளச்செய்ததும் அதிசயம் !!

பாவம் வந்த காரணம்
வீழ்ந்ததே அன்று என் இனம் - அதை
மீட்க வந்த நிவாரணம் - அவர்
மனித மீட்பின் பூரணம் .. எந்தன் இயேசுவே

வார்த்தை மாம்சமானதால் - என்
மாம்சம் ஆவியானதே
இரட்சண்யத்தின் கீர்த்தனை புற
ஜாதி வீட்டிலும் தொனிக்குதே
மரண இருளும் போனதே
விடியல் வெளிச்சம் வந்ததே
பாதை இல்லா இடங்களில் - புது
ஜீவப் பாதை திறந்ததே ….எந்தன் இயேசுவே


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No
  • Song youtube video link :
    Copy sharelink from youtube and paste it here

© 2025 Waytochurch.com