அன்றாடம் அன்றாடம் காப்பாற்றினீர்
Andraadam andraadam kaapaatrineer
அன்றாடம் அன்றாடம் காப்பாற்றினீர்
அன்போடு நடத்தி வந்தீர்
அந்நாளும் இந்நாளும் காப்பாற்றினீர்
எந்நாளும் நடத்திடுவீர்
பேர் சொல்லி அழைத்து
பிள்ளை என்றணைத்து
பின்பற்றச் செய்தீரைய்யா
ஆவியில் நிறைத்து
அல்லல்கள் குறைத்து
ஆசீர்வதித்தீரைய்யா
எங்களை நீர் நினைப்பதற்கும்
எங்களை விசாரிப்பதற்கும்
நாங்கள் எம்மாத்திரம் தேவா
மேன்மையானதே மகத்துவமானதே
வானம் தாண்டியே உம் நாமம் நிற்குதே
விண்மீன்களை வெண்ணிலவை அண்ணாந்து பார்க்கையிலே
உம் கைகளின் கிரியைகளை சற்றே யோசிக்கையிலே
ஜனங்கள் யாவரும் ஒன்றுமில்லையே
உமக்கு முன்பு நான் மாயை மாயையே
நான் யாரென்று அறிந்தவரே மண்ணென்று தெரிந்தவரே
என் நாட்களை அளந்தவரே புல்லென்று புரிந்தவரே
தொலைந்த மனிதரை தேடினீரைய்யா
தவறும் மனிதரை தாங்கினீரைய்யா
பாவியென்று தெரிந்திருந்தும் நீர் என்னை மீட்டீரைய்யா
சாதாரண மனிதரையும் மேலோகம் சேர்த்தீரைய்யா