• waytochurch.com logo
Song # 14734

புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டை

Buthiyulla sthree than veettai


புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டை கட்டுகிறாள்
புத்தியில்லாதவளோ அதை இடித்து போடுகிறாள்

தேவனை முதலில் தேடுகிறாள்
வசனத்தை தினம் நாடுகிறாள்

கணவன் தலையில் க்ரீடம் கீழ்ப்படிகிற Madam
இப்படிபட்ட மனைவிதான் புருஷனுக்கு வேணும்
இவள் பிள்ளைகளுக்கோ என்றும் பாக்யவதி ஆகிறாள்
கணவனுக்கு இவள் என்றும் குணசாலி ஆகிறாள்

நடக்கையிலே பணிவு வார்த்தையிலே கனிவு
கர்த்தரை இவள் நம்புவதால் வாழ்க்கையிலே மகிழ்வு
இவள் வாய் திறந்தால் ஞானம் விளங்க திறக்கிறாள்
சோம்பலின் அப்பத்தை புசிப்பதில்லை உழைத்து மகிழ்கிறாள்

பயபக்தியிலே வளர்ப்பு குடும்ப பொறுப்பில் சிறப்பு
வளரும் பெண்பிள்ளைகளுக்கு இவள் வாழ்க்கை நல்ல படிப்பு
இவள் நாணத்தினால் தன்னை அலங்கரித்துகொள்ளுகிறாள்
அடக்கம் அன்பு அமைதியாலே வெற்றி வாழ்க்கை வாழ்கிறாள்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com