பலமாக ரூபிக்கப்பட்ட தேவ
Balamaaga Roobikkapatta Deva
பலமாக ரூபிக்கப்பட்ட தேவ குமாரன் இயேசுவே
எங்கள் கிரீடங்கள் யாவையும்
கழற்றுகின்றோம்
உம் மகிமையின் பாதத்தில்
கிடத்துகின்றோம்
உம்மை மென்மேலும் உயர்த்துகின்றோம்
உம்முன் நெடுஞ்சாண்கிடையாகின்றோம்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
பரிசுத்தர் முற்றிலும் பரிசுத்தரே
எங்கள் இயேசு முற்றிலும் பரிசுத்தரே
ஜீவனின் மார்க்கத்தை உம்
மாம்சத்தின் திரைவழி தந்தவரே
திரையினுள் பிரவேசிக்க உம்
இரத்தத்தால் தைரியம் தந்தவரே
தேவனின் வீட்டிற்கு அதிகாரியே
புது உடன்படிக்கையின் மத்தியஸ்தரே
நீர் மென்மேலும் பரிசுத்தரே
எதிரான கையெழுத்தை
உம் இரத்தத்தினாலே குலைத்தவரே
ஆக்கினை தீர்ப்பினை
என்னை விட்டு எடுத்தவரே
தேவனின் வீட்டிற்கு அதிகாரியே
புது உடன்படிக்கையின் மத்தியஸ்தரே
நீர் மென்மேலும் பரிசுத்தரே