• waytochurch.com logo
Song # 14760

தேவரீர் நீர் சகலமும் செய்ய வல்லவர்

Devareer Neer Sakalamum Seyya


தேவரீர் நீர் சகலமும் செய்ய வல்லவர்
தேவனே உமக்கு ஒப்பான தேவன் யார்
நீர் செய்ய நினைத்தது நிறைவேறும்
நீர் செய்வதை தடுப்பவன் யார்

தரிசனம் தந்தவர் நீர் அல்லவோ
தவறாமல் நிறைவேற்றி முடிப்பீரே
சவால்கள் என்றும் ஜெயித்திடுவேன்
சர்வ வல்லவர் நீர் தானே

தடைகளை உடைப்பவர் நீர் தானே
தடுப்பவர் எவரும் இங்கில்லையே
கடலையும் ஆற்றையும் கடந்திடுவேன்
கன்மலையே உம்மை துதித்திடுவேன்

உமக்கு ஒப்பானவர் யார்
உமக்கு ஒப்பானவர் யார்
வானத்திலும் பூமியிலும் உமக்கு ஒப்பானவர் யார்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No
  • Song youtube video link :
    Copy sharelink from youtube and paste it here

© 2025 Waytochurch.com