• waytochurch.com logo
Song # 14761

தேவனே நீர் தூரமாய் இருப்பது போல

Devanea Neer Dhooramaai



தேவனே நீர் தூரமாய் இருப்பது போல
இன்று தெரிகிறதே
விசுவாசம் என்னில் உள்ளது
ஆனாலும் எனக்கு ஜெபிக்க முடியவில்லையே

இனி என்ன சொல்வது
இனி யாரைக் கேட்பது
நீர் கிருபை அளித்ததால்

என் இதயத்திலிருந்து
நான் பாடுவேன் துதிப்பேன்
இருள் சூழும் நேரத்தில்
வேதனையின் மத்தியில்

நான் பாடுவேன் துதிப்பேன்
கைகள் உயர்த்தி போற்றுவேன்
உம் வார்த்தை உண்மையே
நான் பாடுவேன்

நீர் நடந்த பாதையில் என்னால் நடந்து செல்ல முடியவில்லையே
உம் கரம் பிடிக்க நினைக்கிறேன்
என் பாவங்கள் என் கண்முன் நிற்கிறதே
இனி என்ன சொல்வது
இனி யாரைக் கேட்பது
நீர் கிருபை அளித்ததால்

என் இதயத்திலிருந்து
நான் பாடுவேன் துதிப்பேன்
இருள் சூழும் நேரத்தில்
வேதனையின் மத்தியில்

நான் பாடுவேன் துதிப்பேன்
கைகள் உயர்த்தி போற்றுவேன்
உம் வார்த்தை உண்மையே
நான் பாடுவேன்



                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com