தேவஜனமே பாடித் துதிப்போம்
Deva Janame Paadi
தேவஜனமே பாடித் துதிப்போம்
தேவ தேவனைப் போற்றிடுவோம்
துதிகள் என்றும் ஏற்றியே
அவரைப் பணிந்திடுவோம்
சென்ற நாளில் கண்ணின் மணிபோல்
காத்த தேவனைத் துதித்திடுவோம்
நீதி தயவு கிருபை நல்கும்
ஜீவதேவனைத் துதித்திடுவோம்
வானம் பூமி ஆளும் தேவன்
வாக்கை என்றுமே காத்திடுவார்
அவரின் உண்மை என்றும் நிலைக்கும்
மகிமை தேவனைத் துதித்திடுவோம்
கர்த்தர் நாமம் ஓங்கிப்படர
தேவமகிமை விளங்கிடவே
தேவசுதராய் சேவை செய்து
தேவராஜனை வாழ்த்திடுவோம்
தம்மை நோக்கி வேண்டும்போது
தாங்கி என்றுமே ஆதரிப்பார்
மறந்திடாமல் உறங்கிடாமல்
நினைத்த தேவனைத் துதித்திடுவோம்
நமது போரை தாமே முடித்து
ஜெயம் என்றும் அளித்திடுவார்
சேனை அதிபன் நமது தேவன்
அவரை என்றும் போற்றிடுவோம்