தேவனின் ஆலயமே பரிசுத்த ஆலயமே
Devanin Aalayam Parisutha
தேவனின் ஆலயமே பரிசுத்த ஆலயமே
மகிமையின் ஆலயமே நாமே அவ்வாலயமே
இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்டோம்
அவருக்காய் கிரயமாய் கொள்ளப்பட்டோம்
தேவனின் ஆவியால் நிரப்பப்பட்டோமே
நாம் தேவ பிள்ளைகளானோம்
அவர் சொந்த ஜனமானோம்
நாம் இனி நம்முடையவர்களல்ல
அவரே நம் சரீரத்தின் சொந்தமானவர்
வஞ்சிக்கப்படாமல் தீட்டுப்படுத்தாமல்
பரிசுத்தம் காத்து கொள்வோம்
பரிசுத்த ஜாதியாக
கர்த்தருக்குள் என்றும் இசைந்திருப்போம்
அவருடன் ஒரே ஆவியாயிருப்போம்
ஆவியினாலும் சரீரத்தினாலும்
மகிமை செலுத்திடுவோம் கர்த்தருக்கே என்றும்
இயேசுவின் வருகை நெருங்கிடுதே
அவரின் பிரசன்னம் விரைந்திடுதே
மகிமை மேல் மகிமை அடைந்திடுவோமே
நாம் மறுரூபமாகிடுவோம்
மகிமையில் சேர்ந்திடுவோம்