தேவ பிரசன்னம் என்னை மூடும்
Deva Prasannam
தேவ பிரசன்னம் என்னை மூடும் போதெல்லாம்
என் வாழ்வில் ஆனந்தமே
வாஞ்சையெல்லாம் ஏக்கமெல்லாம்
மணவாளனின் பிரசன்னமே
நான் தனிமையில் நிற்கும் போது
உம் பிரசன்னம் துணையானதே
நான் சோர்புற்ற வேளைகளில்
உம் பிரசன்னம் பெலனானதே
நான் கலங்கின காலங்களில்
உம் பிரசன்னம் களிப்பானதே
என் துக்கத்தின் நேரங்களில்
உம் பிரசன்னம் பேரின்பமே