Devathi Devae Neerae தேவாதி தேவே நீரே
தேவாதி தேவே நீரே சேவிக்கில் உம்மை
ஜீவாமிர்தம் தரு வீரே
ஈவாகிய தயவை நாவாலும் நயம்பெறப்
பாவாலும் எவர்முனும் ஓவா தறிக்கைசெய்து
நன்றே அருள் என்றே கொலைக்குச் சென்றாய் மரித்
தன்றே நீ பேயை முற்றும் வென்றாய்
நின்றே இவ்வுலகினில் அன்றாடகவே நம்பி
நேசா விஸ்வாசா இராசா சருவ ஜீவ
பொல்லா உலகம் அல்லோ இதனில் செல்லா துணை
நல்லாயனே என்பேன் வல்லாய்
சல்லாப நூலில் அதி உல்லாச மேவிநிதம்
தாயா மாதூயா நன்னேயா சுரர்கள் பதி
பண்டே மறைகை கொண்டே இதயத் தொண்டே புரிந்
தண்டே வரும் உதவி உண்டே
விண்டே குறைகளும் தண்டை சுகிர்தமாகும்
வேதா என் தாதா அதீதா மகத்வமான